Type Here to Get Search Results !

தமிழக வெற்றி கழகம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, மார்ச் 2:


தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் தாபா சிவா மற்றும் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது குறித்தும், கழகத் தலைவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்துவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேலும், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தருமபுரி நகர செயலாளர் சிட்டி சுரேஷ், இளைஞர் அணி நிர்வாகி விமல்ராஜ், வீரமணி உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies