தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில், நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் நகர துணைச் செயலாளர் வ. முல்லவேந்தன், தலைமை கழக பேச்சாளர் டி.ஏ. ரவி, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் ரஹீம், வெல்டிங் ராஜா, சம்மந்தம், சுருளிராஜன், காசிநாதன், கனகராஜ், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)