இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மென் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் திருமதி லாவண்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இரண்டு அமர்வுகளில் மென் திறன் மேம்பாட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
அவர் தனது உரையில், ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்தும், ஆங்கில இலக்கியப் பயிற்சி மூலம் தலைமைத்துவ திறன் இயல்பாக மேம்படும் விதம் குறித்தும் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கமளித்தார். மேலும், வேலை நேர்காணல்கள் மற்றும் குழு விவாதங்களில் (Group Discussion) கலந்து கொள்ளும் போது மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
நிகழ்வுக்கு முன், ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் சி. கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியருமான முனைவர் கிருத்திகா வரவேற்புரை வழங்கி, நிகழ்வின் நோக்கம் குறித்து விளக்கினார். இறுதியில் கௌரவ விரிவுரையாளர் முனைவர் சரண்யா நன்றியுரை வழங்கினார்.
பெண்கள் பங்கேற்பாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)