தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) வர்த்தகரணி சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வர்த்தகரணி தலைவர் பொண்ணுவேல் தலைமையில், மாவட்ட கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டியும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், விவசாய அணி டி.ஆர். அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)