Type Here to Get Search Results !

மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமைக்கு வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு. – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மார்ச். 03:


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ், அரசு திட்டங்களை மாவட்ட அளவில் திறம்பட செயல்படுத்த பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் “மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமை” (District Livelihood Credit Management Agency) அமைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இம்முகமை செயல்பாடுகளை முன்னெடுக்க தனித்தனி பணியாளர் அமைப்பை உருவாக்குவதற்காக, வெளிச்சந்தை மனிதவள முகமை (Outsourcing HR Agency) மூலம் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Coordinator) (1 பணியிடம் மட்டும்) நியமிக்கப்படவுள்ளது.


தகுதி & ஊதியம்

  • ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி

  • நியமன முறை: ஒப்பந்த அடிப்படை

  • மாத ஊதியம்: ரூ.50,000 (தொகுப்பூதியம்)


விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட தகுதி உடையவர்கள், தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு 06.03.2026 மாலை 5.00 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்:

மாவட்ட மகமை, முதல்தளம்,
பழைய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் (Old DRDA Building),
பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம்,
தருமபுரி – 636705

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies