தருமபுரி, மார்ச். 04:
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் திட்டம் தொடர்பான சேர்க்கை முகாம், வரும் 09.03.2026 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்த முகாமில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, Apprentices Act, 1961ன் கீழ் நேர்காணல் மூலம் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான தேர்வுகளை நடத்தவுள்ளன.
பின்வரும் கல்வித்தகுதி உடையவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்:
-
ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள்
-
10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி
-
டிப்ளமோ
-
டிகிரி (பி.இ., பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் உள்ளிட்டவை)
பயிற்சி மற்றும் சலுகைகள்
-
தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.
-
அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை மற்றும் வயது வரம்பில் கூடுதல் 1 ஆண்டு சலுகை கிடைக்கும்.
-
மாதாந்திர உதவித்தொகை ரூ. 14,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும்.
மேலும், டிப்ளமோ மற்றும் டிகிரி தகுதி பெற்றவர்கள் ஆப்ஷனல் பிரிவில் ஒரு ஆண்டு அப்ரண்டீஸ்ஷிப் பயிற்சி பெற்று NSDC/SSC வழங்கும் சான்றிதழ் பெறலாம்.
ஐ.டி.ஐ, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி தகுதி பெற்றவர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்களுடன் 09.03.2026 அன்று நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)