தருமபுரி – மார்ச் 11:
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலம் அல்லது வீடு வாங்கும் போது, விற்கும் போது பத்திர பதிவு செய்ய பென்னாகரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சிரமமும் ஏற்பட்டது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் தொடங்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி சட்டசபையில் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், வினோத், நகர செயலாளர் செந்தில், ஒன்றிய தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #Papparapatti #SubRegistrarOffice #TamilNaduGovernment #PublicService #TamilNews #LocalNews
.gif)

.jpg)