இண்டூர் - மார்ச் 11:
தருமபுரி மாவட்டம் இண்டூரில், அதிமுக மாநில மருத்துவரணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தருமபுரி சட்டமன்றத் தொகுதி நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 10 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்காக இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் மற்றும் செல்வமகன் சேமிப்பு திட்டங்களில் புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 வீதம் செலுத்தி மொத்தம் 501 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி அதிமுக மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, பழனிச்சாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் பழனி, சிவப்பிரகாசம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)