Type Here to Get Search Results !

குப்பன் கொட்டாய் கிராமத்தில் சின்னமாரியம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறுவர் - சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


தருமபுரி - மார்ச் 10:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குப்பன் கொட்டாய் கிராமத்தில் சின்னமாரியம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 6ஆம் தேதி சின்னமாரியம்மன் திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்றிரவு கிராமத்தில் சிறுவர் மற்றும் சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில் குப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கைதட்டி உற்சாகமாக ஊக்குவித்தனர்.


கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு குப்பன் கொட்டாய் ஊர் கவுண்டர் முனிராஜ், மந்திரி கவுண்டர் முருகேசன், கோல் கவுண்டர் சின்னராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாரியப்பன், ஜெய்கோபால், ஞானம், சிவன், குமார், பாமக மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் லோகநாதன், கிளை செயலாளர் மூர்த்தி, கிளை தலைவர் ஆறுமுகம், மேற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சீனிவாசன், மேற்கு மாவட்ட மாணவர் அணி ஒன்றிய தலைவர் சபரி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies