Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் 5 பள்ளிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்.


தருமபுரி - மார்ச் 11:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயல் அலுவலர் இந்துமதி, துணைத் தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பத்மா வரவு–செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாலக்கோடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அண்ணா துவக்கப்பள்ளி, நூற்றாண்டு துவக்கப்பள்ளி, அக்ரஹகாரம் துவக்கப்பள்ளி, கல்கூடப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உருது துவக்கப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மோகன், சாதிக்பாஷா, சரவணன், ரூஹித், விமலன், குருமணி, ஜெயந்தி மோகன், லட்சமிராஜசேகர், பிரியாகுமார், தீபா, ஆயிஷா, சிவசங்கரி, நாகலட்சுமி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies