Type Here to Get Search Results !

காடுசெட்டிப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழா: 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.


தருமபுரி - மார்ச் 11


தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள காடுசெட்டிப்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பாலக்கோடு வடமேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமார் மற்றும் பாலக்கோடு வடமேற்கு ஒன்றிய செயலாளர் செல்வி ஆகியோர் தலைமையேற்றனர்.


மேலும் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் சஞ்சீவன், தென்கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்யபிரபு, தென்மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகம், தகவல் தொழில்நுட்ப தொகுதி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் பேசிய சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமார், கட்சியின் கொள்கை தலைவர்களான அஞ்சலையம்மாள் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோரின் பெருமைகள் குறித்து பேசினார். தொடர்ந்து மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ப்ரியா, கிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, இந்திராணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜோதி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்கள் ஈஸ்வரி, ப்ரியா, இணை அமைப்பாளர் ஜோதி, பாலக்கோடு தென்மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கற்பகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies