Type Here to Get Search Results !

பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கோரி பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா ஆட்சியரிடம் மனு.


தருமபுரி, மார்ச் 2:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட துணை தலைவர் சிவா, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியதாவது: பாலக்கோடு அருகிலுள்ள ஆத்துக்கொட்டாய், சின்னார் அணை, தொள்ளகாதனை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் ‘சிக் டேம்’ (Check Dam) கட்டப்பட்டால், விவசாயிகளுக்கு நீராதாரம் அதிகரித்து பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் வளம் பெறும். எனவே, மேற்கண்ட நீர்த்தேக்கங்களில் சிக் டேம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மேலும், தற்போது பாலக்கோடு நகரில் பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த நீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மூட்டு வலி மற்றும் பல் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்தார். அதனால், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


அத்துடன், கொல்பதூர் – தூள் செட்டிய ஏரி தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றினால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று, கரும்பு உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உருவாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையிற்கு முன்னாள் முதல்வர்
காமராஜர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்றும், மணியக்காரன் கொட்டாய் – ஜருதலாவ் பஞ்சாயத்து உட்பட்ட நெடுஞ்சாலை அருகிலுள்ள பெரிய ஏரியில் சிறுவர் பூங்கா, படகு வசதி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 


இந்நிகழ்வில் முனியப்பன், கமலாதித்தன், மஞ்சுநாத், சுசீந்திரன், முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies