Type Here to Get Search Results !

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி, மார்ச் 2:


தருமபுரி மாவட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நார்த்தம்பட்டி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நல்லம்பள்ளி வட்டம் லலிக்கம் வருவாய் கிராமம் நார்த்தம்பட்டி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூக மக்களுக்கு 1997ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் எடுப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் NH–7 நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது தருமபுரி வட்டம் ஏ.ரெட்டிஅள்ளி வருவாய் கிராமம், புல எண் 440/1B, 1C-ல் உள்ள சுமார் 8,300 சதுர மீட்டர் இடத்தை நார்த்தம்பட்டி அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்காமல், வேறு நபர்களுக்கு வழங்க முயற்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினர்.


மேலும், குறித்த நிலப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மாதையன், மாவட்ட துணை செயலாளர் பாலன், மாவட்ட பொறுப்பாளர் பச்சா கவுண்டர், மாவட்ட பொறுப்பாளர் அலமேலு, மாவட்ட பொறுப்பாளர் மாதையன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies