Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.6.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனம் பயன்பாட்டிற்கு வந்தது.


தருமபுரி, மார்ச் 2:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் பணிநிமித்தமாக வருகை தருகின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் அலுவலக நுழைவு வாயிலிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடந்து வருவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.


இந்த நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.6.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இஆப., அவர்கள் இன்று (02.03.2026) தெரிவித்தார்.


இப்புதிய பேட்டரி வாகனம் ஒரே நேரத்தில் 4 நபர்கள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலுவலக நுழைவாயிலிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை எளிதில் சென்று வர இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், இந்த வாகனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 21.02.2026 அன்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களால் வழங்கப்பட்டு, சேவை தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள இந்த புதிய பேட்டரி வாகன சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies