அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் “திறனகம்” எனும் சிறப்பு மாவட்ட திறன் மையங்களை நிறுவியுள்ளது. இம்மையங்கள் இளைஞர்களின் தொழில் விருப்பங்களை தொழில்துறை தேவைகளுடன் இணைத்து, நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டும் ஒருங்கிணைந்த மையங்களாக செயல்படுகின்றன.
ஒவ்வொரு திறனகமும்:
-
தொழில் வழிகாட்டல்
-
திறன் மேம்பாட்டு ஆலோசனை
-
பயிற்சி இணைப்புகள்
-
வேலைவாய்ப்பு தொடர்புகள்
-
தொழில் முனைவு ஆலோசனை
போன்ற சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக இயங்குகிறது.
இம்மையங்கள் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டலில், மாவட்ட திறன் அலுவலர்களால் TNSDC ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகின்றன. கணினி வசதி, குளிர்சாதன வசதி மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இம்மையங்கள் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 03.03.2026 அன்று 23 திறனகங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டத்திலும் “திறனகம்” துவக்கப்பட்டு தற்போது முழுமையாக செயல்பாட்டில் உள்ளது..
தருமபுரி மாவட்ட திறனகம், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் நேரடியாக வந்து பதிவு செய்து சேவைகளை பெறும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், திறனகங்களின் செயல்பாட்டை வலுப்படுத்த பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துணை முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் திறன் மேம்பாடு ஊக்குவிக்கப்பட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட திறன் அலுவலர் திரு. உ. முரளிதரன் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)