வாக்குச்சாவடிகளில் உறுதி செய்ய வேண்டிய வசதிகள்
மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும்:
-
குடிநீர் வசதி
-
கழிப்பறை வசதி
-
மின்சார வசதி
-
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வசதிக்கான சாய்தளம் (Ramp)
-
வாக்காளர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவான ஏற்பாடுகள்
உறுதி செய்யப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.
தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. தேர்தல் பணிகள் சட்டப்படி மற்றும் துல்லியமாக நடைபெற தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), நகராட்சி ஆணையாளர்கள் (தருமபுரி, அரூர்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு பண்டரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)