தருமபுரி – மார்ச் 26:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல கட்டங்களாக நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. முதற்கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 01.04.2026 முதல் 16.04.2026 வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் 17.04.2026 முதல் 22.04.2026 வரை மற்றும் 24.04.2026 முதல் 02.05.2026 வரை நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டம் 05.05.2026 முதல் 16.05.2026 வரை, நான்காம் கட்டம் 17.05.2026 முதல் 31.05.2026 வரை மற்றும் ஐந்தாம் கட்டம் 02.06.2026 முதல் 14.06.2026 வரை நடைபெறும். இந்த நீச்சல் பயிற்சி முகாம்கள் அனைத்தும் தருமபுரியில் உள்ள இராஜாஜி நீச்சல்குளத்தில் நடைபெறவுள்ளது.
பயிற்சி நேரங்கள் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, 8.00 மணி முதல் 9.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி, 5.00 மணி முதல் 6.00 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கு நடைபெறும். பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை தனிப்பட்ட பயிற்சி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீச்சல் பயிற்சிக்கான கட்டணம் ரூ.1770 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை இணைய வழி அல்லது POS இயந்திரம் மூலம் செலுத்தலாம். விண்ணப்ப படிவங்களை நீச்சல்குள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீச்சல் கற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.பெறவுள்ளது, இதில் பங்குபெற மாணவர்கள், பொதுமக்களுக்கு அழைப்பு.
.gif)

.jpg)