புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிடம் சுமார் 1,722 சதுர அடிகள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக இந்த கட்டிடம் சுமார் ₹2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
-
டெலி கோபால்ட் கதிர்வீச்சு இயந்திரம் – ₹0.2 கோடி
-
கோபால்ட் கதிர்வீச்சு சோர்ஸ் – ₹86 இலட்சம்
மருத்துவ சேவைக்காக நிறுவப்பட்டுள்ளது.
இந்த பிரிவில்:
-
ஆண்கள் பிரிவில் 10 படுக்கைகள்
-
பெண்கள் பிரிவில் 5 படுக்கைகள்
வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் சராசரியாக 200 முதல் 250 நோயாளிகள் மருத்துவ சேவை பெறுவார்கள். இதில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மாதத்திற்கு 20 முதல் 30 பயனாளிகள் சிகிச்சை பெறுவார்கள்.
குறிப்பாக:
-
மார்பக புற்றுநோய்
-
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
-
வாய் புற்றுநோய்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், தருமபுரி மாவட்டத்துடன் சேர்த்து சுற்றியுள்ள திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் இந்த மருத்துவ சேவையை பெற முடியும்.
இந்நிகழ்வில் தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. மனோகர், துணை முதல்வர் மரு. சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், உள்ளிருப்பு மருத்துவர் மரு. நகேந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. சிவக்குமார், குழந்தைகள் நல மருத்துவர் மரு. காந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)