தருமபுரி அரசினர் பொறியியல் கல்லூரி தருமபுரியில் நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயிலும் நான்கு மாணவ, மாணவியர்கள் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள பன்னாட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் இரண்டு வார தொழிற்பயிற்சி மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள்
-
மாணவி எஸ். ஹசீரா – தென் கொரியாவின் பூசான் தேசிய பல்கலைக்கழகம்
-
மாணவன் எஸ். பாலாஜி
-
மாணவி டி. சதிதா
-
மாணவி எஸ். சுதர்ஷினி
மேற்கண்ட மூவர் பஹ்ரைனில் உள்ள அஹ்லியா பல்கலைக்கழகம்யில் தொழிற்பயிற்சி பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக தரவரிசை மாணவர்களுக்கும் பாராட்டு
இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் தேர்வில் தரவரிசை பெற்ற மாணவிகள் பி.ஆர். ஹர்ஷினி, கே.எஸ். புவனேஷ்வரி, ஆர். மௌனிகா மற்றும் மாணவன் ஆர். குருசாமி ஆகிய அமைப்பியல் துறை மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். இந்நிகழ்வில் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் உடனிருந்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)