அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும்
கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்விற்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை துறை அலுவலர்கள் விரைந்து நிறைவேற்றி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பல்வேறு திட்டங்கள் ஆய்வு
இந்த கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக:
-
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்)
-
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்
-
ஜல் ஜீவன் மிஷன் (அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு)
-
பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம்
-
தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
-
தமிழ்நாடு பைபர் நெட்
-
அனைவருக்கும் கல்வி இயக்கம் (சமக்ரா சிக்ஷா)
உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
இக்கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட வன அலுவலர் திரு ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)