எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, தேர்தல் பணிகளில் சிறப்பு காவலர்களாக பணியாற்ற விருப்பமுள்ள முப்படையிலிருந்து ஓய்வு பெற்ற இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: சட்டமன்ற தேர்தல்–2026 இல் சிறப்பு காவலர்களாக பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், தங்களது விருப்ப விண்ணப்பத்துடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு, தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண்: 04342-297844-ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)