Type Here to Get Search Results !

திமுக அரசை கண்டித்து தருமபுரியில் பாஜக-வின் “நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, மார்ச் 2:


தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் “நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” என்ற தலைப்பில் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நகரின் அனைத்து வார்டுகளிலும் சக்தி கேந்திரா தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன.


இந்நிகழ்ச்சியின் நிறைவாக, தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில் நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.


தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்:

  • அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி

  • மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன்

  • பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி

  • அமமுக நகரச் செயலாளர் பார்த்திபன்

  • பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ

உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies