இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.68.50 இலட்சம் ஆகும். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் உள்ள 133 பழங்குடியினர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட சமூக முன்னேற்ற முயற்சிகளின் உண்மைச் சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட “முன்னேற்றப் பாதையில்” என்ற புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு, அறக்கட்டளை தலைவர் அவர்களிடம் வழங்கினார். அறக்கட்டளையின் 15 ஆண்டுகால பயணம் மற்றும் அதன் சமூக தாக்கத்தை விளக்கும் குறும்படமும் இந்நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
அரசுத் துறைகள் மற்றும் TVS–சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் சமூக முன்னேற்றப் பணிகள் மாவட்ட மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு முக்கிய பங்காற்றுகின்றன என மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், கல்வியியல் ஆலோசகர் டாக்டர் பழனிச்சாமி, கள இயக்குநர்கள் திரு. ஜெயபால், திரு. சீனிவாசன் உள்ளிட்ட அறக்கட்டளை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)