Type Here to Get Search Results !

இரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) குரூப்-டி தேர்வு: தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்.


தருமபுரி, பிப்.24:
 


இரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-டி தேர்விற்கான 22,195 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 02.03.2026 ஆகும். 


மேற்கண்ட தேர்விற்கு போட்டித் தேர்வர்கள் தயாராகும் வகையில், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 27.02.2026 (வெள்ளிக்கிழமை) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளன. அனுபவமிக்க சிறந்த பயிற்றுநர்களால் பயிற்சி வழங்கப்படுவதுடன், இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.


இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தேர்வர்களின் பயிற்சி தேவைகளை கருத்தில் கொண்டு, இம்மையத்தில்:

  • 3000க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட இலவச நூலக வசதி

  • அமைதியான படிப்பக வசதி

  • இலவச Wi-Fi வசதி

  • இலவச கணினி பயன்பாட்டு வசதி

போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://rb.gy/xxudem என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 04342–288890 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் இணைந்து பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Permalink:

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies