Type Here to Get Search Results !

தருமபுரியில் சட்டமன்ற தேர்தல் - 2026 முன்னிட்டு FST, SST குழுக்களுக்கு SOP பயிற்சி நடைபெற்றது.


தருமபுரி, பிப்.24:
 


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு பறக்கும்படை (FST), நிலையான கண்காணிப்பு (SST) உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்பு குழுக்களுக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் (SOP) தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இப்பயிற்சியில் பறக்கும்படை (FST), நிலையான கண்காணிப்பு குழு (SST), வீடியோ கண்காணிப்பு குழுக்கள் (VST), கணக்கீட்டு குழுக்கள், கட்டுப்பாட்டு அறை, MCMC மற்றும் பிற நிலையான குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. தேர்தல் காலத்தில் பணப்பரிவர்த்தனை, பரிசுப் பொருட்கள் விநியோகம், விதிமுறைகள் மீறல் போன்றவற்றை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருமதி. இரா. காயத்ரி (தருமபுரி), திரு. செம்மலை (அரூர்), திரு. சுப்பிரமணியன் (பாலக்கோடு), திருமதி நர்மதா (பென்னாகரம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திரு. கருணாகரன், தேர்தல் வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து தேசிய, மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தேர்தல் செயல்முறைகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து கண்காணிப்பு குழுக்களும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வலியுறுத்தினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies