Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் 5வது வார்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு நடைபெற்றது.


பாலக்கோடு, பிப்.24:
 


பாலக்கோடு பேரூராட்சி 5வது வார்டு, கோட்டை தெருவில் அமைக்கப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுக மாவட்ட பொருளாளர் முருகன், அவைத்தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொதுமக்களுக்கு சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதுடன், 20 லிட்டர் தண்ணீரை ரூ.5க்கு வழங்கும் நோக்கில் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலைய அமைப்புப் பணிகள் நிறைவடைந்தன. பின்னர், நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தரமான குடிநீர் எளிதில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் அசீனா வகாப்ஜான், ரூஹித், கிளை செயலாளர்கள் மியான், ஜபி, இளைஞர் அணி மன்சூர், நிர்வாகிகள் அன்சர், நூருல்லா, இலியாஷ், அஸ்லம், பாபாஜான், சக்திவேல், மகளிர் அணி தலைவி நசீம்பேகம் உள்ளிட்டோர் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies