தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இரு குடும்பத்தினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் தெரிவித்ததாவது: நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் பூர்வீக நிலம் உள்ளது. இந்த நிலம் வாரிசுதாரர்களுக்கு சட்டப்படி பாகம் பிரிக்கப்பட்டது, இதனால் இரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு உரிய வாரிசு உரிமையை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
சுமார் 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுவரை பூர்வீக சொத்தில் இருந்து பாகம் பிரித்து வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஒரு நபர் போலியான பத்திர ஆவணம் தயாரித்து, சம்பந்தப்பட்ட நிலத்தில் அத்துமீறி வீடு கட்டி, தற்போது மின் இணைப்பு பெற முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினர். நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வாரிசுதாரர்கள் யாரும் கையெழுத்திடாத சூழலில், மின் இணைப்பு வழங்க முயற்சிப்பது சட்டவிரோதம் என அவர்கள் தெரிவித்தனர்.
போலி ஆவணத்தின் அடிப்படையில் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபருக்கு ஆதரவாக செயல்படும் மின்சார வாரிய அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழக்கு தீர்ப்பு வரும் வரை எந்தவித மின் இணைப்பும் வழங்கக் கூடாது எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)