Type Here to Get Search Results !

தருமபுரியில் மகா சிவராத்திரி: அனைத்து சிவன் கோவில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தருமபுரி, பிப்ரவரி 16:


தருமபுரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மகா சிவராத்திரியை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் நான்கு கால சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு கால பூஜையையும் தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


குறிப்பாக, தருமபுரி கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மருதவாணேஸ்வரர் திருக்கோவில் (அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய) கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிவன் அடிகளார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா குழுவின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies