மொரப்பூர், பிப். 24:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டார வள மையம் சார்பில் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 24.02.2026 அன்று மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மருத்துவ முகாமை அரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர்கள் திரு. கணேசன் மற்றும் திருமதி உமாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுரேஷ் மற்றும் திரு. பெருமாள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் (IE), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
இம்முகாமின் மூலம் 78 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாம் மூலம் தகுதியான மாணவர்களுக்கு மேல்சிகிச்சை, உதவி உபகரணங்கள் மற்றும் கல்வி சார்ந்த ஆதரவுகள் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)