Type Here to Get Search Results !

ஆதரவின்றி உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த “மை தருமபுரி” அமைப்பினர்.


தருமபுரி:
 

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், “மை தருமபுரி” அமரர் சேவை மூலம் பச்சியம்மன் கோவில் மயானத்தில் மதச்சார்பற்ற முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் கோட்டப்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.அருள்ராஜ், “மை தருமபுரி” அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கோகுல்ராஜ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


“மை தருமபுரி” அமரர் சேவை மூலம் இதுவரை 192 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். மனிதநேய பணியாக இந்த சேவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies