Type Here to Get Search Results !

புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக தருமபுரி வணிகர் சங்கம் ஒருநாள் கடையடைப்பு; 100% கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்.


தருமபுரி, பிப்.26:
 


தருமபுரி பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை எதிர்த்து தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் ஒருநாள் முழு கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதன் காரணமாக, பழைய பி.ஆர். ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை சார்ந்து வாழ்ந்து வந்த சிறு மற்றும் குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர். தினசரி வர்த்தகம் கணிசமாக குறைந்ததால் பல குடும்பங்கள் வாழ்வாதார சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினர்.


மேலும், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் தினசரி பயணத்தில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


இந்த நிலையை கண்டித்து நடைபெற்ற தர்ணா போராட்டத்தில்,

  • பழைய பி.ஆர். ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்திலேயே அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்,

  • தற்போது தற்காலிகமாக செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும்

என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என தருமபுரி வணிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies