Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


பாலக்கோடு, பிப்.26:
 


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் Tamilaga Vettri Kazhagam (தவெக) சார்பில் உணவு மற்றும் விருந்தோம்பல் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை வகித்தார். பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், பாலக்கோடு கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் சஞ்சீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில், மார்ச் 1ஆம் தேதி திருமலைவாசன் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ள தவெக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தல் பிரச்சாரம், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மற்றும் கட்சியின் சின்னமான “விசில்” சின்னத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் நிர்வாகிகள் லோகநாதன், ராஜசேகரன், மூவேந்தன், கணபதி, திருப்பதி, விஜய்குமார், அருள்முருகன், சக்திவேல், சீராளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies