Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி, பிப்.26:
 


தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் J. ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவையொட்டி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதிகோண்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இவ்விழாவில் மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் அசோகன், விவசாய அணி டி.ஆர். அன்பழகன், தகடூர் விஜயன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகளிர்களுக்கு புடவைகள், சலவைப் பெட்டிகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies