தருமபுரி, பிப்.26:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (25.02.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S. மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. K. ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 55 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்றைய தினம் புதிதாக 44 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க ஏதுவாக இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)