Type Here to Get Search Results !

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு B.Sc (Hospitality & Hotel Administration) படிப்பிற்கு தாட்கோ மூலம் வாய்ப்பு.


தருமபுரி, பிப்.26:
 


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் (B.Sc – Hospitality & Hotel Administration) மூன்று வருட முழுநேர இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


சென்னை தரமணியில் செயல்படும் Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition Chennai (IHM) நிறுவனம் ISO 9001:2015 தரச்சான்று பெற்றது. இது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். மேலும், American Council of Business அங்கீகாரம் பெற்றதுடன், பிரான்ஸ் நாட்டிலுள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கொண்டுள்ளது. சர்வதேச தரவரிசைகளில் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளது.


சேர்க்கை நிபந்தனைகள்:

  • ஆதிதிராவிடர் / பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்

  • பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்


இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் NCHM JEE – 2026 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2026

  • தேர்வு நாள்: 25.04.2026 (இணையதளம் வழி)

  • பதிவு செய்ய: http://exams.nta.nic.in/nchm-jee/


மேலும், TAHDCO மூலம் கல்விச்செலவு முழுமையாக ஏற்கப்படும். இப்படிப்பில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


வேலை வாய்ப்பு:

படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்கள் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிய வாய்ப்பு பெறுவர்.

  • ஆரம்ப மாத ஊதியம்: ரூ.25,000 – ரூ.35,000

  • அனுபவம் மற்றும் பதவி உயர்வு அடிப்படையில்: ரூ.50,000 – ரூ.70,000 வரை பெறலாம்.


மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிபுரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies