தருமபுரி, பிப்.28:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் R. Sathiesh, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் 27.02.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கைகளை தொடர்ந்து, சில வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றிருந்த சிரமங்களை கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
11 வாக்குச்சாவடிகள் அருகில் உள்ள அரசு கட்டடங்களுக்கு மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-
40 வாக்குச்சாவடிகள் அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டடங்களுக்கு மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சில கட்டடங்கள் பழுதடைந்திருந்ததால், பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கூட்டத்தில் மேற்கண்ட சீரமைப்புகள் தொடர்பாக எந்தவித ஆட்சேபனையும் முன்வைக்கப்படவில்லை.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருமதி இரா.காயத்ரி (தருமபுரி), திரு.செம்மலை (அரூர்), திரு.சுப்பிரமணியன் (பாலக்கோடு), திருமதி நர்மதா (பென்னாகரம்), தேர்தல் வட்டாட்சியர் திரு.அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சீருடனும், வெளிப்படையாகவும் நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
.gif)

.jpg)