தருமபுரி, பிப்.28:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மருத்துவர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் J. Jayalalithaa அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மருத்துவ மற்றும் ரத்த தான முகாம் தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை ரவி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டனர்.
இந்த முகாமில்
-
இரத்த அழுத்தம் (பிபி)
-
இரத்த சர்க்கரை அளவு
-
தைராய்டு
-
குழந்தையின்மை தொடர்பான ஆலோசனை
-
கண் பரிசோதனை
உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும் நடைபெற்ற ரத்த தான முகாமில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தன்னார்வமாக ரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)