Type Here to Get Search Results !

தருமபுரி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் வார்டு 1, 2-ல் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி, பிப்.24:
 


தருமபுரி நகர அதிமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு வார்டு 1 மற்றும் 2-ல் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மதிகோண்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமையிலானார். நகரச் செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் அசோகன், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், தேவையுடையோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் தண்டபாணி, பூக்கடை வெற்றி, வர்த்தக அணி நகரச் செயலாளர் பாரத், வார்டு பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies