Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குண்டலப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


தருமபுரி, பிப்ரவரி 17:


தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குண்டலப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, விவசாய அணி டி.ஆர். அன்பழகன், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் அசோகன், நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி அமைப்பு வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை, பிரிவு வாரியாக பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.


இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய மற்றும் கிளை  நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies