தருமபுரிக்கு வரும் அனைத்து பேருந்துகளையும் தனியார் பேருந்து நிலையத்திற்கு மாற்றும் அரசின் முடிவு மக்களின் வாழ்வாதாரத்தையும் சிறு வணிகர்களின் வருமானத்தையும் பாதிக்கும் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் ராஜகோபால் பேருந்து நிலையம் பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவித்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் மு. சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி தொகுதி வேட்பாளர் பேராசிரியர் கி. சாந்தலட்சுமி, மண்டல செயலாளர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் சிலம்பரசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்
-
தருமபுரி பேருந்து நிலையத்தை மாற்றக் கூடாது
-
அனைத்து வழித்தட பேருந்துகளையும் பழைய புறநகர் பேருந்து நிலையத்திலேயே இயக்க வேண்டும்
-
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் மயமாக்கல் திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும்
மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக முழு கடையடைப்புப் போராட்டத்திற்கும் கட்சி ஆதரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்து நிலையம் தொடர்பான முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)