Type Here to Get Search Results !

திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு – கட்சி துணைச் செயலாளர் புகார்.


தருமபுரி, ஜன. 22:


தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், திமுக ஒன்றிய செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) துணைச் செயலாளர் ஆறுமுகம், தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தான் தற்போது தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராகப் பதவி வகித்து வருவதாகவும், முன்னதாக நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராம ஊராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.


நல்லம்பள்ளி வட்டாரத்தில் கட்சி தொடர்பான கொடிகள் மற்றும் பதாகைகள் அமைப்பது தொடர்பாக, நல்லம்பள்ளி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மல்லமுத்து தன்னுடன் தகராறில் ஈடுபட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த தகராறின் போது, தன்னை ஜாதிரீதியாக இழிவாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.


இந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies