Type Here to Get Search Results !

இளைஞர்கள் சாவில் கலவரத்தை தூண்டுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பாமகவினர் கோரிக்கை.


பாலக்கோடு, டிச. 01 -

பாலக்கோடு அருகே சிக்காராதஅள்ளி கூட்ரோடு பகுதியில் நடந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நிலைமை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் (19) கெலமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (20) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

கடந்த 27ஆம் தேதி இரவு, இருவரும் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு நோக்கி சென்றபோது நிகழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


உறவினர்கள் சந்தேகம் – சாலை மறியல், காவல் நிலைய முற்றுகை

இந்த இருவரின் மரணத்தில் “மர்மம் உள்ளது” என உறவினர்கள் சந்தேகத்தை வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், “திட்டமிட்ட கொலை” என சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பிவருவது போலீசார் கவனத்தை ஈர்த்தது.


விசாரணைக்கு 2 இளைஞர்கள் அழைப்பு – பாமகவினர் எதிர்ப்பு

விசாரணை செயல்முறையின் ஒரு பகுதியாக 2 இளைஞர்கள் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கட்சித் தொண்டர்கள் காவல் நிலையத்துக்கு திரண்டனர்.

“இளைஞர்களை பொய் வழக்கில் சிக்கவைக்கக் கூடாது” என்றும், “சிலர் தன்னிச்சையாகப் பொய்யான தகவல்கள் பரப்பி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்” 


என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


பாமகவினரின் கோரிக்கை

தவறான தகவல்கள் சமூக அமைதியை பாதிக்கும் சூழல் உருவாகி வருவதாகக் கூறிய பாமகவினர்,

“தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” 

என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies