தருமபுரி | 27.12.2025
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில், திருவனந்தபுரம்–சென்னை சென்ட்ரல் அதிவேக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் வசதி, 01.01.2026 புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என Southern Railway நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Railway Board ஒப்புதலுடன், சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் Superfast Express ரயில்களுக்கு, சோதனை அடிப்படையில் (experimental basis) மொரப்பூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விவரங்கள்:
-
Train No. 12695(Dr. MGR Chennai Central → Thiruvananthapuram Central)👉 மொரப்பூர்: இரவு 7.04 மணிக்கு வருகை – 7.05 மணிக்கு புறப்பு
-
Train No. 12696(Thiruvananthapuram Central → Dr. MGR Chennai Central)👉 மொரப்பூர்: அதிகாலை 5.29 மணிக்கு வருகை – 5.30 மணிக்கு புறப்பு
இந்த ரயில் நிறுத்தம், தருமபுரி மாவட்ட பொதுமக்கள், கல்லூரி மாணவ–மாணவியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் நீண்டநாளாக முன்வைத்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மொரப்பூரில் ரயில் நிறுத்தம் கிடைக்க தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி அவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்துள்ளனர். இந்த வசதி அமல்படுத்தப்படுவதன் மூலம், மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.jpg)
