தருமபுரி, டிச.20:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S. மகேஸ்வரன், B.Com., BL., அவர்களின் ஆணைப்படி, தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 31 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 32 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, தருமபுரி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர்களாக இருந்து, தருமபுரி நகரம், அதியமான்கோட்டை, தொப்பூர், மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைகளை உள்ளடக்கிய தருமபுரி உட்கோட்டத்தில் நிரந்தரமாக வசித்து வரும் விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர், 31.12.2025-க்குள் தேவையான அசல் ஆவணங்களுடன், ஊர்க்காவல் படை அலுவலகம், சாலை விநாயகர் கோவில் தெரு, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தருமபுரி என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆட்காள் சேர்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 9498170105, 9487829949, 8870647333 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தருமபுரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

.jpg)