தருமபுரி – டிசம்பர் 26:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் யாரேனும் கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர், பக்கவாதம், புற்றுநோய், காசநோய் (டி.பி.), ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் அல்லது பிற உடல் ஊனமுற்ற நிலைகளால் பாதிக்கப்பட்டிருப்பின், அவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதி மூலம் மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ்,
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.10,000,
-
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.7,000,
-
காது கேளாதோர் மற்றும் பிற ஊனமுற்றோர்களுக்கு மாதம் ரூ.5,000
என ஆயுட்காலம் முழுவதும் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள், தருமபுரி மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில், தரைதளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை உரிய மருத்துவ சான்றுகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரில் அணுகி, விண்ணப்பப் படிவங்களை பெற்று சமர்ப்பித்து இந்த நலத்திட்டத்தின் பயன்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

.jpg)