தருமபுரி, டிசம்பர் 22:
தருமபுரியில், மகாத்மா காந்தி பெயருடன் செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதாக கூறி, ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி. தீர்த்தராமன் தலைமையில், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது நினைவுக்கும், சமூகநல திட்டங்களின் அடையாளத்திற்கும் எதிரானது என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர் காளியம்மாள், வழக்கறிஞர் மோகன், பொது குழு உறுப்பினர்கள் ஜெயசங்கர், நரேந்திரன், நகர தலைவர் வேடி, வெற்றிவேந்தன், முபாரக், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். மத்திய அரசு உடனடியாக தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டம், தருமபுரி நகரில் பெரும் கவனத்தை ஈர்த்தது.