பாலக்கோடு, நவம்பர் 4:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையம் அருகில் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் மினி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. இந்நிகழ்வு நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இடம்பெற்றது. பேருந்தில் இருந்து திடீரென கரும்புகை எழுந்ததை அப்பகுதியில் சென்றவர்கள் கவனித்தனர். உடனடியாக அவர்கள் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குமுன் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தர உள்ள நிலையில், இந்த திடீர் தீவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– செய்தி: தகடூர்குரல்.காம் | பாலக்கோடு

.jpg)