Type Here to Get Search Results !

“தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” தருமபுரியில் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி, நவம்பர் 8:

வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பிரசார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.


இப்பயணத்தின் 16ஆம் நாள் நிகழ்ச்சி இன்று தருமபுரி BSNL அலுவலகம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையேற்றார்.


அவர் உரையாற்றியபோது,

“தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீடிலும் நல்லாட்சி மலரச் செய்வது பாஜக அரசின் நோக்கம். மக்களோடு மக்களாகச் சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்வுகாணும் முயற்சி தான் இந்தப் பயணம். 2026 தேர்தலில் மக்கள் நல்லாட்சிக்காக தீர்மானிக்கப் போகிறார்கள். திமுக ஆட்சியின் சூழ்ச்சி இனி எடுபடாது — மாற்றம் தவிர்க்க முடியாதது,” என்று கூறினார்.

 

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம், மாநில பொதுச் செயலாளர் கருப்பம்பட்டி நரேசன் (KaruppumBJP), மாநில பொருளாளர் அரங்கநாதன், மாநில இளைஞரணி பார்வையாளர் சுசீந்திரன், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் மாரியப்பன், தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன், அத்துடன் அ.இ.அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் (KPAnbalaganoffl)சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, வே. சம்பத் குமார்தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் புகழேந்தி, அரவிந்தன்இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ஜே.பி. நஞ்சப்பன்புதிய நீதிக் கட்சியின் வெங்கடேசன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். “நல்லாட்சி நெருங்குகிறது – தமிழகம் தலை நிமிரப் போகிறது!” என முழங்கிய கோஷங்கள் தருமபுரி நகரம் முழுவதும் ஒலித்தன.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies