Type Here to Get Search Results !

2025–2026 “மீண்டும் மஞ்சப்பை” விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, நவ. 25:

தமிழகத்தில் “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், 2025–2026 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை மாநிலச் சட்டமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) மீதான தடைச் சட்டத்தை திறம்பட செயல்படுத்தி, அதற்கான மாற்றுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளில் முன்னிலையாக செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளுக்குப் பதிலாக, மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்துவதையும், தங்கள் வளாகத்தை முழுமையாக பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றுவதையும் உறுதியாக செயல்படுத்தும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.


விருதுத்தொகைகள்:
  • முதல் பரிசு: ரூ. 10 லட்சம்
  • இரண்டாம் பரிசு: ரூ. 5 லட்சம்
  • மூன்றாம் பரிசு: ரூ. 3 லட்சம்


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் – TNPCB, தங்கள் வளாகங்களுக்குள் மற்றும் வெளியே பிளாஸ்டிக் தடையை நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்ட முன்னோடி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது.


விண்ணப்பப் படிவங்கள்:
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம்
➡ dharmapuri.nic.in

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம்
➡ tnpcb.gov.in


விண்ணப்பத்துடன் தேவையான
  • இணைப்புகள்,
  • அமைப்புத் தலைவர் அல்லது தனிநபரின் கையொப்பம்,
  • மென் நகல் (CD / Pen drive),
  • மேலும் இரண்டு கடின நகல்கள் சேர்த்துத்தான் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்ப சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 15.01.2026

இந்த விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies