தமிழகத்தில் மாற்றுத்திறனாளி பெண்களின் சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதும், அவர்களுக்கும் பொதுநலப் பணிகளில் சம வாய்ப்பு வழங்குவதும் நோக்கில், அனைத்து பேரூராட்சிகளிலும் மாற்றுத்திறனாளி பெண்களை மன்ற நியமன உறுப்பினர்களாக நியமிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், பாலக்கோடு பேரூராட்சி நியமன உறுப்பினராக 17வது வார்ட் அண்ணா நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி மற்றும் செயல்அலுவலர் இந்துமதி பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பதவியேற்ற பின்னர் கவிதா கூறியதாவது:
“தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த மன்ற உறுப்பினர் பதவி அமைகிறது. என்னைப் போன்ற சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த நியமனம் சமூக அந்தஸ்த்தையும், பொதுமக்களுக்கு உதவும் ஆற்றலும் அளிக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கும், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.” என அவர் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)